Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சரியான நடவடிக்கை எடுக்காமல் ஒரு தொழிலை முடுக்குவதா?- சுபஸ்ரீ மரணம் குறித்து எஸ்.வி. சேகர் அதிரடி

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் பேனர் விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தவர் சுபஸ்ரீ. அவருடைய இழப்பிற்கு பிறகு இனிமேல் பேனர் வைக்கக்கூடாது என்று பல தரப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

மேலும் அனுமதி பெறாமல் பிளக்ஸ் பேனர் அடிக்கும் நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5000 அபராதம் விதிக்கப்படும் என்று அரசு பிறப்பித்த உத்தரவுக்கு நடிகர் எஸ்.வி சேகர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் இதற்கு தனியார் நிறுவனம் ஒன்று மாநகராட்சிக்கு எதிராக ஹைகோர்டில் வழக்கு தொடுத்து உள்ளது.

இதை அடுத்து நடிகர் எஸ்.வி சேகர் நடந்த விபத்திற்கு சரியான நடவடிக்கை எடுக்காமல் ஒரு தொழிலையே முடக்குவது சரியாகாது என்றும் ஷாக் அடித்து ஒருவர் இறந்தால் மின்வாரியத்தை மூட முடியுமா என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு போட்டு இருக்கிறார்.