Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் கமல்ஹாசன் கொடுத்த அடுத்த அதிரடி! மிரட்டப்போகும் அந்த ஒரு தருணம் - வெளியானது ரகசியம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை மூன்றாம் முறையாக இந்த வருடமும் தொகுத்து வழங்கி வருபவர் நடிகர் கமல் ஹாசன். அதே வேளையில் அவரின் இந்தியன் 2 படமும் எடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டிலும் அவர் பிசியாக இருக்கும் வேளையில் அரசியல் பணிகளையும் கவனித்து வருகிறார். சமூக அநீதிகளுக்காக அவரின் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது.

சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, ராம்சரண், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இப்படத்தில் நயன்தாரா, தமன்னாவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ஒரு தமிழ் பிரபலம் இப்படத்தில் இணைந்திருப்பது சர்ப்பிரைஸாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சந்திப்பில் பேசிய நடிகர் சிரஞ்சீவி கமல்ஹாசன் தனக்கு டப்பிங் குரல் கொடுப்பதாக கூறி ரகசியத்தை உடைத்தார். சுதந்திர போராட்ட வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை காண அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.