Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகையின் பெயரை தவறாக பதிவிட்டு நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்ட நடிகர் மனோபாலா

நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல முகம் கொண்டவர் பாலா. அவர் ட்விட்டரில் எப்போதும் போட்டோ போடுவது ட்விட் செய்வது என்று ஆக்டீவாக இருந்து வருபவர்.

பாலா எந்த ஒரு நடிகர் நடிகையுடன் போட்டோ எடுத்து கொண்டாலும் அதை ட்விட்டரில் பதிவு செய்வதுண்டு.

அதை போல் நேற்று ட்விட்டரில் நடிகர் விஷாலுடன் எடுத்த போட்டோவை போட்டு தம்பி என்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் புகைப்படத்தை போட்டு அதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் என்கின்ற பெயருக்கு பதிலாக ஷ்ரத்தா கபூர் என்று மாற்றி பதிவிட்டிருந்தார்.

அதற்கு நெட்டிசன்கள் இந்த விஷயம் ஷ்ரத்தா கபூருக்கு தெரியுமா? என்றும் மேலும் சில பேர் ஏன் இந்த வேலை என கேட்டு பாலாவை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருவது ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது.