Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை இன்றும் ஜெண்டில் மேன் என்று தான் சொல்வேன், ஏனெனில்? பிரபல இயக்குனர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் என இரண்டு படங்கள் வந்துவிட்டது.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களுடன் நல்ல வரவேற்பு பெற்றும் சூப்பர் ஹிட்டானது, இந்நிலையில் இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் ஒரு பேட்டிக்கொடுத்துள்ளார்.

அதில் ‘நான் உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் படத்தில் அஜித்தை நடிக்க அழைத்தேன், அவர் உங்கள் படத்தில் வில்லனாக கூட நடிக்க ரெடி என நடித்துக்கொடுத்தார்.

7 நாட்கள் அவரை வைத்து எடுத்தேன், ஒரு நாள் கூட நேரம் தவறியது இல்லை, யாரையும் குறை பேசியது இல்லை, அவரை இன்று வரை ஜெண்டில் மேன் என்று தான் அழைக்கின்றேன்’ என கூறியுள்ளார்.