Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் அழகை,பெருமையை புகழ்ந்துதள்ளிய பிரபல நடிகை, கிரிக்கெட் பிரபலம்! போட்டோவுடன் பதிவு

அஜித்தின் சமீபத்திய தோற்றம் புகைப்படங்களாக கடந்த சில நாட்களாக ரசிகர்கள் அதிகம் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். எப்போதும் சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் லுக்கில் இருக்கும் அவர் கருப்பு நிற முடிக்கு மாறியுள்ளார்.

இது தல 60 படத்திற்காக தான் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது ஒருபக்கம் இருக்க நடிகை சோனியா அகர்வாலிடம் ரசிகர்கள் அஜித்தின் முந்திய புகைப்படத்தை பதிவிட்டு உங்களுக்கு அவர எவ்வளவு பிடிக்கும் என கேட்டுள்ளார்கள்.

இதனால் அவர் மிக அழகான நடிகர்களில் அவரும் ஒருவர். கண்களின் வழியே அவர் தன் உணர்வுகளை பரிமாறுவதற்கே தனி வணக்கம் சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

அதே போல கிரிக்கெட் பிரபலம் ஹர்பஜன் சிங் தன் டிவிட்டரில் விஜய தசமிக்காக வாழ்த்து கூறுதுவதன் பொருட்டு நேர்கொண்ட பார்வை படத்தின் சிறப்பை பற்றி குறிப்பிட்டுள்ளார்.