Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இறந்த போன பிரபல காமெடி நடிகருக்கு இறுதி சடங்கில் உதவியது யார் தெரியுமா?

அண்மையில் காமெடி நடிகர் கிருஷ்ண மூர்த்தி தேனியில் படப்பிடிப்பில் மாரடைப்பால் இறந்த செய்தி பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.

10 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர் 17 வயதில் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்த போது நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் அறிமுகம் கிடைத்துள்ளது.

பின் இருவரும் இணைந்து நடித்த ஜயா, தவசி மற்றும் பல மக்கள் மனதில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

அவரின் மரணம் குறித்து வடிவேலும் மிகவும் வருத்தத்தில் உள்ளார்.

மேலும் கிருஷ்ண மூர்த்தி காலில் அடிபட்டுக்கிடந்த காலகட்டத்தில் வடிவேலு தான் அவரின் அறுவை சிகிச்சைக்கான செலவை ஏற்றுக்கொண்டாராம்.

இதே போல பல சமயங்களில் அவர் உதவியுள்ளாராம். கடைசியாக இறுதி சடங்கிலும் வடிவேலு தான் உதவினாராம்.

கிருஷ்ண மூர்த்தியும் வடிவேலுவின் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் நட்பும் வைத்துள்ளாராம்.