Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வடிவேலுவ யாருனு நினைச்சீங்க! இதோ வந்துட்டாருல - சிங்கம் களம் இறங்கிருச்சு

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு காமெடியன் நகைச்சுவை நடிகர் வடிவேலு. அவரின் உடல் மொழி அசைவுகளை கண்டு அசராதவர்கள் இல்லை. கெட்டபை பார்த்து சிரிக்காதவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.

பல படங்களில் அனைத்து ஹீரோக்களுடன் நடித்து விட்ட அவருக்கு 24 ம் பட புலிகேசி விவகாரத்தால் அண்மைகாலமாக ரெட் கார்டு போடப்பட்டுள்ளது.

ஆனால் மீம் கலைஞர்களின் தொழிலே அவரை வைத்து தான் என்று சொல்லலாம். நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகள் குறித்த விமர்சனங்களுக்கும் அவரின் காமெடிகள் பொருந்தி விடுகிறது.

இந்நிலையில் அவருக்கு இன்று பிறந்த நாள் என டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அவரின் பிறந்த நாள் இன்று இல்லையாம். செப்டம்பர் 12 ல் தான் அவரின் பிறந்தநாள். இதை ஏற்கனவே அவர் கூறியுள்ளார்.

எது எப்படியோ மீண்டும் அவர் குறித்த டேக் #HappyBirthdayVadivelu தற்போது ட்ரெண்டிங்கில் கொண்டாட்டத்தில் உள்ளது. வடிவேலு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அவர் குறித்து மீம்களை பாருங்கள்..