Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை மோசமாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட பிரபல இயக்குனர்.. கொந்தளிப்பில் தளபதி ரசிகர்கள்

நடிகர் விஜய்யை பற்றி கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார் சிந்து சமவெளி பட புகழ் இயக்குனர் சாமி.

"என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள் என பேசிவிட்டு, அவர்களுடன் கைகொடுத்துவிட்டு அதை டெட்டோல் போட்டு கழுவுகிறீர்கள். அதை நானே பார்த்திருக்கிறேன்.

50 கோடி சம்பளம் வாங்குகிறீர்கள். 60 நாள் நடித்துவிட்டு பிளாக்கில் சொத்து வாங்கி கொள்கிறீர்கள். நேர்மை, உண்மை என மேடையில் மட்டும் பேசுகிறீர்கள். எத்தனை நாள் தமிழகத்தை ஏமாற்றமுடியும்.

தயவு செய்து நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். மேடையில் கருத்து சொல்ல வேண்டாம்" என அவர் விஜய்யை தாக்கி பேசியுள்ளார்.