Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிரட்டல் காட்டிய தல ரசிகர்கள்! பலரையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்

அஜித்திற்கு பெரும் ரசிகர்கள் படையே இருக்கிறது. தல தல என அவரை இப்போது பலரும் கொண்டாட தொடங்கியுள்ளனர். ஒரு நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதராக அவரும் புகழ்ந்து வருகிறார்கள்.

இவ்வருடம் அவரின் நடிப்பில் வந்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலையும் அள்ளியது.

இந்த மகிழ்ச்சி ஒரு பக்கம். மறுபக்கம் அஜித் ஆளில்லா விமானம் கண்டுபிடித்தது, துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றது ஆகிய வெற்றிகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அதே வேளையில் தீபாவளிக்கு அஜித் படங்கள் சமீப காலமாக வராதது அவர்களுக்கு வருத்தமே.

இந்நிலையில் நெல்லை மாவட்ட ரசிகர்கள் இந்த தீபாவளி வெத்து, அடுத்த தீபாவளிக்கு வைப்போம் வேட்டு என பேனர் வைத்துள்ளனர்.

இது பலரின் கண்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.