Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் ஹாலிவுட்டில் இருந்திருக்க வேண்டும்- ஆதங்கத்துடன் பேசிய பிரபல பாடகர்

அஜித் ஒரு ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கும் நடிகர் என்று பலரும் கூற கேட்டிருப்போம்.

ரசிகர்கள் பலருக்கும் இந்த எண்ணம் உண்டு, அதே ஆசையை ஒரு பேட்டியில் கூறியுள்ளார் பிரபல ராப் பாடகர் யோகி பாபு.

இவர் அஜித்தின் விவேகம் படத்தில் சர்வைவா பாடலை பாடியுள்ளார். ஒரு பேட்டியில் பேசும்போது, விவேகம் படத்தில் சில காட்சிகளை ரிலீஸுக்கு முன் பார்த்தேன், அதில் அஜித் செம பின்னணி இசையில் நடந்து வருகிறார். அதை பார்த்ததும் இவர் ஹாலிவுட்டில் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

கோலிவுட், பாலிவுட் கூட இல்லை அவர் ஹாலிவுட் ஸ்டார் என ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.