Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ், தெலுங்கு நடிகர்களை புறக்கணித்த மோடி! பலரும் கொந்தளிப்பு

நேற்று இரவு ஷாருக்கான், அமீர் கான், கங்கனா உள்ளிட்ட பல டாப் பாலிவுட் நட்சத்திரங்களை அழைத்து ஒரு நிகழ்ச்சியில் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. அதன் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகிக்கொண்டிருக்கின்றன.

சினிமா தொடர்பான இந்த சந்திப்புக்கு தென்னிந்திய சினிமா பிரபலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலரும் தற்போது கோபமடைந்துள்ளனர்.

தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவியான உபஸ்னா இதுபற்றி கோபத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மற்ற சினிமா நட்சத்திரங்கள் பலரும் அதை ஷேர் செய்துள்ளனர்.