Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் ரசிகர் மன்றம் வேண்டாம் சொன்னதற்கு இதுதான் உண்மையான காரணம்- பிரபலத்திடம் கூறிய தல

அஜித் முன்னணி நடிகராக இருந்து பல தைரியமான விஷயங்களை செய்தவர். ரசிகர் மன்றங்களை நீக்கினார், முதலமைச்சர் முன்பே தைரியமாக சில விஷயங்களை பேசினார்.

இன்னும் அவர் செய்த காரியங்கள் பல கூறலாம். ரசிகர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி ரசிகர் மன்றம் வேண்டாம் என்று சொன்னது தான்.

இதுகுறித்து ஒரு பேட்டியில் இயக்குனர் சரண் பேசியுள்ளார். அதில் அவர், ரசிகர் மன்றம் பற்றி அஜித்திடம் நான் கேட்டேன். அப்போது அவர் இந்த மன்றங்கள் மூலம் எனது ரசிகர்கள் இடையே பெரிய பிரச்சனைகள் வருகிறது. அதை நான் நிறைய பார்த்துவிட்டேன்.

எனக்கு எனது ரசிகர்கள் எல்லோருமே ஒன்று தான் அப்படி இருக்க இந்த மன்றங்களால் ரசிகர்களுக்குள் ஏன் சண்டை என இந்த மன்றங்கள் வேண்டாம் என நினைத்தாக தல கூறியதாக இயக்குனர் சரண் கூறியுள்ளார்.