Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் முடிந்தபிறகும் இன்று ட்ரெண்டாகும் கவின்.. லட்சக்கணக்கில் ட்விட்! காரணம் இதுதான்?

சரவணன் மீனாட்சி புகழ் நடிகர் கவின் பிக்பாஸ் 3வது சீசனில் பங்கேற்றபோது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பல பெண்களை ஒரே நேரத்தில் காதலிப்பதாக அவர் கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனாலும் அவருக்கு ரசிகர்கள் ஆதரவு அதிக அளவில் இருந்தது. கவின் பல வாரங்களாக எலிமினேஷன் லிஸ்டில் இருந்தாலும் அவரை ரசிகர்கள் அதிகம் வாக்களித்து காப்பாற்றினர்.

தற்போது பிக்பாஸ் முடிந்து பல வாரங்கள் ஆகியும் இப்போதும் கவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். தீபாவளி ஸ்பெஷல் பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கவின் பல்வேறு கெட்டப்களில் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.

அதற்கு ரசிகர்கள் #KavinTimeToShine என ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். தற்போது வரை 2.75 லட்சம் ட்விட்கள் அவருக்காக பதிவாகியுள்ளன.