Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் தம்பிக்கு ஏதாவது என்றால், நான் வந்து நிற்பேன், ஏனென்றால்? பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்

அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் பலங்களை கொண்டவர். இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது.

இதை தொடர்ந்து அஜித் தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் அஜித் குறித்து கலைப்புலி தாணு அவர்கள் ஒரு பேட்டியில் ‘அஜித் தம்பியுடன் தொடர்ந்து படம் செய்ய முடியவில்லை தான்.

ஆனால், என் மனைவி இறந்த போது அவருடைய மனைவி ஷாலினியுடன் பைக்கிலேயே வந்து என் வீட்டில் 4 மணி நேரம் காத்திருந்தார்.

அதை ஒரு போதும் நான் மறக்க மாட்டேன், அந்த தம்பிக்கு விலையே கிடையாது, அவருக்கு எது என்றாலும், நான் வந்து நிற்பேன்’ என்று கூறியுள்ளார்.