Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு தகப்பனாக என் மகனுக்கு நான் கொடுத்த சொத்து இது தான்! நடிகர் விக்ரம் உருக்கமான பேச்சு

நடிகர் விக்ரம் சினிமாவில் ஒரு திறமையான கலைஞர். அவரின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் விக்ரம் என் மகன் துருவிடம் உனக்கு பிடித்த வேலையை செய் என கூறினேன். ஆனால் அவர் நடிப்பு தான் பிடிக்கும் என்றார். ஹீரோவாக அவர் இப்போது உருவாகியிருப்பது மகிழ்ச்சி.

அர்ஜூன் ரெட்டி ஹீரோ கதாபாத்திரம் மிகவும் கனமானது. இதன் தமிழ் ரீமேக்கில் துருவால் நடிக்க முடியுமா? என்ற தயக்கம் இருந்தது.

இப்போது இந்த படத்தில் துருவ்வின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. ஒரிஜினல் தன்மை கெடாமல் படமாக்கியிருக்கிறார்கள்.

நானும் இப்படத்தில் உதவி இயக்குனர் போல பணியாற்றியுள்ளேன். துருவ் ஹீரோவானது என் குடும்பத்திற்கும், என் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி.

ஒரு தகப்பன் தன் மகனுக்கு சொத்தை கொடுப்பான், நான் துருவ்வுக்கு எனது ரசிகர்களை கொடுத்திருக்கிறேன் என பேசினார்.