Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவை விட்டு போகிறேன் என சொன்ன ரஜினி! கமல் என்ன பதில் கூறினார் தெரியுமா

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக டாப் ஹீரோவாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் பல சமயங்களில் தான் சினிமாவை விட்டே போகப்போவதாக நடிகர் கமல்ஹாசனிடம் கூறியிருக்கிறாராம்.

சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சண்டை பற்றி கேட்ட கேள்விக்கு தான் கமல் இந்த தகவலை கூறியுள்ளார். ஆரம்பம் முதலே ரஜினி-கமல் ஆகியோரை போட்டியாளர்களாக கருதி ரசிகர்கள் இரண்டாக பிரிந்திருந்தார்கள். தற்போது அதே போல விஜய்-அஜித் ஆகியோரது ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஒருமுறை ரஜினி சினிமாவை விட்டு போகிறேன் என சொன்னதும் கமல் சொன்ன பதில் இதுதான். "அதெல்லாம் செஞ்சி தொலைக்காதீங்க. எனக்கு இன்னும் நெறய வேலை இருக்கு. ஒருத்தர் போனால் இன்னொருவரும் போகணும் என்று அடம்பிடிப்பார்கள். நான் போக தயாராக இல்லை" என கமல் கூறினார்.

மேலும் பேசிய அவர், "ரசிகர்கள் அப்படிதான் இருப்பார்கள். கொஞ்ச நாளில் வளர்ந்துவிடுவார்கள். நாங்கள் தனியாக பேசும்போது ரசிகர்கள் சண்டை பற்றி என்ன பேசுவோம் என தெரிந்தால் துடித்துப்போவார்கள் அந்த ரசிகர்கள்" என கூறியுள்ளார்.