Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீண்ட காலத்திற்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாரா அஜித்?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர்களில் ஒருவர். ஆனால் அவர் எப்போதும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்ற கொள்கை உடையவர்.

தன்னுடைய படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு கூட வரமாட்டார். அதனால் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு அவரது ரசிகர்களுக்கு நீண்ட காலமாக இல்லாமல் போனது.

ஆனால் நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் +அவர் சினிமாவில் 60 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் விதமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவிற்கு அஜித், விஜய், ரஜினி உட்பட பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் அழைப்பு சென்றுள்ளதாம்.

கமல்ஹாசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அஜித் அந்த நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.