Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 64 இயக்குனருக்கு குவியும் பாராட்டு! கைதி படத்தின் வசூல் நிலை இது தான்! முக்கிய தயாரிப்பாளர் அதிரடி பேச்சு

கடந்த மாதம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் பிகில். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பெண்களின் முன்னேற்றம் பற்றிய விசயங்களால் பெண்களிடம் பாராட்டை வாங்கியது. ஆனால் கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

வசூல் ரூ 250 கோடியை கடந்துவிட்டது என சொல்லப்பட்டது. இந்நிலையில் முக்கிய தயாரிப்பாளரான கே.ராஜன் பல அதிரடியான விசயங்களை கூறினார் என்பதை முந்தய செய்தியில் பார்த்தோம்.

இதில் மேலும் அவர் கைதி படம் நன்றாக இருக்கிறது. ஒரு நாள் இரவிலே எடுக்கப்பட்டது. செட் எதுவும் கிடையாது, ஹீரோயின் கிடையாது, பாடல்கள் கிடையாது, ஆடம்பர ஜிகினா வேலைகளும் கிடையாது, இயற்கையாக எடுக்கப்பட்டது, அளவான செலவில் முறையாக எடுக்கப்பட்டது, இயக்குனருக்கு என் வாழ்த்துக்கள்.

முதலில் தியேட்டர் கிடைக்கவில்லை, 5 ம் நாளே பிகில் தியேட்டர்கள் குறைக்கப்பட்டது, கைதி அதிகரிக்கப்பட்டது. கோடிகோடியாக செலவழிக்கப்பட்ட படங்கள் ஓட வேண்டும் என்பதில்லை. குறைவான செலவில் வரும் நல்ல படங்களை மக்கள் ஆதரிக்கிறார்கள் என கூறியுள்ளார்.