Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரசியலை விளையாட்டாக பேசுகிறாரா விஜய்? தளபதி பற்றி முன்னணி நடிகரின் பதில்

விஜய் தன்னுடைய பட விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அரசியல் விஷயங்கள் பற்றி மறைமுகமாக தொடர்ந்து பேசிவருகிறார்.

இந்நிலையில் இதுபற்றி நடிகர் கமல்ஹாசனிடம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது.

நடிகர் விஜய் பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளர் ஒருவர் 'விஜய் இசை வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஆனால் என்ன செய்வேன் என விளையாட்டாக பேசுகிறார். உங்கள் கருத்து என்ன?' என கேட்டார். பதில் அளித்த கமல்ஹாசன், "இசை வெளியீட்டு விழாவில் அரசியலை அவர் விளையாட்டாக பேசுகிறார் என நீங்கள் முன்பதிவு செய்துவிட்டிர்கள். பேசியிருக்கக்கூடாது என்பது தான் என்னுடைய ஆசை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான உத்வேகத்தை அவர் காண்பிக்க வேண்டும். அவரை நான் அரசியலுக்கு வரவேற்று ரொம்ப நாள் ஆகிவிட்டது" என்று கூறியுள்ளார்.