Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சங்கத்திற்கும் செக் வைத்த அரசு.. அதிர்ச்சியில் விஷால் அணி

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைவராக இருந்த நிலையில் அதற்கு தனி அதிகாரி நியமித்து அரசு உத்தரவிட்டது. தற்போத அதே போல நடிகர் சங்கத்திற்கும் தனி அதிகாரி நியமித்து உதவிட்டுள்ளது.

சில மாதங்கள் முன்பு நடிகர் சங்க தேர்தல் நடந்து முடிந்தாலும் அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் இன்னும் வாக்குகள் எண்ணப்படாமல் உள்ளது.

நடிகர் சங்கம் செயல்படாமல் இருப்பதாக கூறி பதிவுத்துறை ஐஜியாக இருக்கும் கீதா என்பவரை சங்கத்தின் சிறப்பு அதிகாரியாக அரசு நியமித்துள்ளது. அவர் இன்று முதல் நடிகர் சங்கத்திற்கு பொறுப்பேற்கிறார்.

'இது ஜனநாயக படுகொலை' என நாசர் மற்றும் விஷால் அணியினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதை சட்டப்படி சந்திப்போம் என்றும் கூறியுள்ளனர்.