Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் அப்பா கூட இல்லை, அஜித் அவர்களே எனக்கு நம்பிக்கை கொடுத்தார்- பிரபலம் ஓபன் டாக்

அஜித் எப்போதும் மற்றவர்களின் உழைப்பிற்கு நல்ல பாராட்டு கொடுப்பவர். ஒருவரிடம் திறமை இருந்தால் அவரின் வளர்ச்சிக்கு உதவ கூடியவர்.

அண்மையில் பிரபல சண்டை காட்சி இயக்குனர் பீட்டர் ஹெயின் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் யூனியன் கார்ட்டு வாங்கியதுமே ஊட்டி சென்றுவிட்டேன்.

எனது முதல் படமே அஜித் அவர்கள் நடித்த அமராவதி படம் தான். என்னிடம் அவர் பீட்டர் நீங்கள் சண்டை காட்சிகள் நடிக்கிறீர்கள், வருங்காலத்தில் பெரிய இடத்திற்கு வருவீர்கள் என்றார்.

நான் அவரிடம் என்னை மறந்துவிடாதீர்கள் என்றதும் அவர் நான் எப்போதும் உங்களை மறக்க மாட்டேன், எப்போதும் எனது நண்பர் நீங்கள் என்றார்.

இப்போதும் அஜித் அவர்கள் என்னிடம் அதே உறவில் உள்ளார். எனது அப்பா கூட என்னை வாழ்த்தவில்லை, ஆனால் எனது உழைப்பை பார்த்து முதன்முதலாக வாழ்த்தி நான் பெரிய அளவில் வருவேன் என நம்பிக்கை கொடுத்ததே அஜித் சார் என சந்தோஷமாக பேட்டி கொடுத்துள்ளார்.