நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்தார் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக். இவரது நடிப்புக்கு அதிகம் ரசிகர்கள் உள்ளனர்.
சமீபத்தில் ஒரு பிரஸ் மீட்டில் இவர் பற்றி பலருக்கும் தெரியாத தகவல் ஒன்றை நடிகர் கமல் தெரிவித்துள்ளார். ஹேராம் படத்தில் நவாஸுதீன் சித்திக் அசிஸ்டெண்டாக பணியாற்றினாராம், அதுமட்டுமின்றி ஒரு சிறிய ரோலிலும் படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் நேரம் அதிகமானதால் அவரது பகுதியை வெட்டிவிட்டார்கள். அது அவரிடம் சொல்லப்படவில்லை. படத்தின் ப்ரீமியரில் அதை அறிந்து அவர் வெளியில் அமர்ந்து கதறி அழுதாராம்.