Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அயோத்தி விசயம்! அன்றே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னது - பலரையும் கவர்ந்த பேச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா நடிகர் என்பதை தாண்டி தன் சொந்த வாழ்க்கையில் ஆன்மீக இறை நம்பிக்கை கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

பல நல்ல விசயங்களை அவர் மற்றவர்களுக்கு செய்து வருகிறார். ஆன்மீக நம்பிக்கையுள்ள பல விசயங்களை தன் படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது அயோத்தி விசயத்தில் சமூக நல்லிணக்கத்தை கைபிடிக்கும் வகையிலான தீர்ப்பே வெளியாகியுள்ளது என்பது பலரின் எண்ணம்.

இது ஒரு பக்கம் இந்த விசயத்துடன் ஒத்துப்போகும் வகையில் ரஜினி தன் படத்தில் அயோத்தியில் மட்டும் ராமர் கோவிலும், மசூதியும் கட்டி என்ன புரயோஜனம்! முதலில் அனைவரும் இதயத்தில் கோவிலும், மசூதியும் கட்டிக்கோங்க, இந்துவா, கிறிஸ்டினா, முஸ்லிமா? இந்தியாவில் வாழும் எல்லோரும் இந்தியன் என்ற எண்ணம் எப்போது வருகிறதோ அப்போது தான் நாடே உருப்படும் என கூறியுள்ளார். சமரச கருத்துள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.