Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை மோசமாக விமர்சித்தவர்களுக்கு நடிகர் ஆனந்த்ராஜ் பதிலடி

பிகில் படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. இருப்பினும் இந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது.

குறிப்பாக ஒரு விமர்சகர் விஜய்யின் ஒரு கெட்டப்பை தாத்தா என கூறி மோசமாக விமர்சித்திருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நடிகர் ஆனந்த்ராஜ் பேசியுள்ளார்.

"விஜய் என்ற ஒருவருக்காக தான் மக்கள் தியேட்டருக்கு வந்து படத்தை ஒருமுறை பார்ப்போம் என வருகிறார்கள். அந்த மாஜிக் விஜய்க்கு மட்டும் தான். ஷூட்டிங்கில் நான் இருந்தேன். படத்தை விமர்சியுங்கள். தாத்தா ஆகிட்டார் என கூறுகிறார் ஒருவர். தனி மனித விமர்சனம் வேண்டாம். இதை வன்மையாக கண்டிக்கிறேன். பிகில் படத்தின் வெற்றிக்கு ஒரே காரணம் தம்பி விஜய் மட்டும்தான்" என கூறியுள்ளார் அவர்.