சூர்யா சினிமாவில் மட்டுமல்ல சொந்த வாழ்க்கையில் ஒரு ஜெண்டில் மேன் போல தான். அவருடைய படங்கள் மட்டுமல்ல லைஃப் ஸ்டைலும் இதை பிரதிபலிக்கின்றன.
அகரம் பவுண்டேசன் மூலம் பல குழந்தைகளுக்கு கல்வி சேவையளித்து வரும் அவர் விவசாயிகளுக்காகவும் பல உதவிகளை செய்து வருகிறார்.
அவரின் நடிப்பில் அடுத்ததாக சூரரை போற்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
தற்போது சூர்யா மகள், மகனுடன் மனைவி ஜோதிகாவின் குடும்பத்தாரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது தற்போது வைரலாகிவருகிறது. இந்த புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளதுதால் லைக்குகள் குவிந்து வருகிறது.