Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் என்னை கெட்ட வார்த்தையில் திட்டினார்- பிரபலம் கூறிய சுவாரஸ்ய பதில்

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வந்துள்ளது.

இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது, இந்நிலையில் பாராதிராஜா அவர்களின் மகன் மற்றும் நடிகர் மனோஜ் சமீபத்தில் ஒரு பேட்டிக்கொடுத்துள்ளார்.

அதில் அவர் ‘நான் தாஜ்மஹால் படம் நடித்தப்போது, அந்த படத்தின் பாடல்களை அஜித் கேட்டார், அவர் திருப்பாச்சி அருவாள பாடலை கேட்ட பிறகு, ஒரு ஆங்கில கெட்டவார்த்தையில் திட்டினார்.

அதோடு, உனக்கு மட்டும் எப்படிடா இவ்ளோ மாஸான பாடல், ரகுமான் சார் இசை, எல்லாம் உங்க அப்பா, என்று கூறினார்’ என மனோஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், மனோஜ் விரைவில் சில வெப் சீரிஸ் எடுக்கும் திட்டத்தில் உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.