Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் கவினுக்கு இப்படியும் ஒரு வெறித்தனமான ரசிகரா? என்ன செய்துள்ளார் பாருங்க

சென்ற மாதம் முடிந்த பிக்பாஸ் 3வது சீசனில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இறுதி வாரத்தில் போட்டியில் இருந்து திடீரென வெளியேறினார் நடிகர் கவின். அவருக்கு ஏராளமான ரசிகர் ஆதரவு இருந்தும் அவர் இந்த முடிவு எடுத்தது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு இனி வேலையில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக கவின் தெரிவித்திருந்தார். அதனால் அவர் விரைவில் படத்தில் ஹீரோவாக நடிக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கவினின் தீவிர ரசிகர் ஒருவர் கவினின் முகத்தை கையில் பச்சை குத்தியுள்ளார். அந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.