Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போதையில் விபத்து ஏற்படுத்தினாரா? காரில் சிக்கய மது.. நடிகர் ராஜசேகர் கைதாக வாய்ப்பு

பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகர் சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். அவர் சென்ற மெர்சிடஸ் பென்ஸ் கார் சாலை அருகில் இருந்த டிவைடரில் மோதியது. ஏர்பேக் தான் ராஜசேகரின் உயிரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் ராஜாசேகர் காரில் இருந்து சில மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் போதையில் தான் ராஜசேகர் விபத்து ஏற்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விபத்து நடந்த உடன் அவர் வேறொரு காரில் ஏறி சென்றுவிட்டார் என்பதால் பொலிஸாரால் அவர் போதையில் தான் இருந்தாரா என்பதை உறுதிசெய்யமுடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ராஜசேகர் மீது தாறுமாறாக கார் ஓட்டியதற்காக பல சலான்கள் நிலுவையில் உள்ளன. அதனால் இவர் கைதாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.