Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஞ்சலியை பெயர் சொல்லி அழைத்த இயக்குனர்.. சண்டை போட்ட ஜெய்! பிரபல தயாரிப்பாளர் குமுறல்

ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் காதலிக்கிறார்கள் என சமீப காலமாக கிசுகிசு அதிகம் வருகிறது. அதுபற்றி அவர்கள் இதுவரை எந்த விளக்கமும் கொடுத்ததில்லை.

அவர்கள் ஜோடியாக நடித்த பலூன் படம் பெரிய பிளாப் ஆனது. அந்த படத்தினை தயாரித்தவர் போஸ்டர் நந்தகுமார் என்பவர். அவர் மெட்ராஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர்.

அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்த சமயத்தில் ஜெய் செய்த பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். அதனால் பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

ஒருமுறை இயக்குனர் சினிஷ் அஞ்சலியை பெயர் சொல்லி அழைத்துவிட்டாராம். அதை பார்த்த ஜெய்.. 'மேடம் என்று தானே அழைக்கவேண்டும்' என சண்டை போட்டுள்ளார். மேலும் அடுத்த நாளே ஜெய்-அஞ்சலி இருவரும் ஷூட்டிங் வராமல் கொடைக்கானலில் இருந்து யாருக்கும் சொல்லாமல் கிளம்பிவிட்டார்களாம்.

அதன்பிறகு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் வரமாட்டேன் என பிரச்சனை செய்தாராம் ஜெய். படம் நஷ்டமானது. அதனால் இனிமேல் சினிமாவே தயாரிக்கக்கூடாது என முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர்.