Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்ககிட்ட சொல்லி ஒண்ணும் ஆகபோறதில்ல.. பத்திரிகையாளர்களிடம் கடும் கோபத்தில் பேசிய விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படம் நேற்று வெளியாகவேண்டியது. ஆனால் அது சில சிக்கல்கள் காரணமாக தடைபட்டு நேற்று இரவு தான் ரிலீஸ் ஆனது.

காலையில் விஜய் சேதுபதி கலைமாமணி விருது பெறுவதற்காக அரசின் தலைமை செயலகத்திற்கு வந்தார். அங்கு அவரை சூழ்ந்துகொண்டு பத்திரிகையாளர்கள் பல கேள்விகளை கேட்டனர்.

விருது கொடுத்ததற்கு அரசுக்கு நன்றி தெரிவித்த அவரிடம் சங்கத்தமிழன் ஏன் ரிலீஸ் ஆகவில்லை என கேட்டதற்கு "அதைப்பத்தி உங்ககிட்ட சொல்லி ஒண்ணும் ஆகபோறதில்ல" என கோபத்துடன் பதில் அளித்தார்.

அதன் பிறகு ஐஐடியில் முஸ்லீம் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பற்றி கேள்வி கேட்டதற்கு "அத ஏன் என்கிட்ட கேக்குறீங்க.." என மேலும் கோபத்துடன் பதில் அளித்துவிட்டு சென்றுவிட்டார்.