Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்60 நிகழ்ச்சிக்கு அஜித், விஜய் வருகிறார்களா? கடைசி நேரத்தில் வந்த பதில்

நடிகர் கமல்ஹாசன் சினிமாதுறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடும் விதத்தில் இன்று ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்காக முன்னணி நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித் போன்றவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

அவர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் விஜய் மற்றும் அஜித் இருவரும் இந்த நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள் என்பதுதான்.

விஜய் தற்போது தளபதி64 ஷூட்டிங்கிற்காக டெல்லியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.