Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்! நாளைக்கும் அதிசயம் நடக்கும்.. மேடையில் அரசியல் பேசிய ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் தற்போது வரை அரசியல் கட்சியை துவங்காமல் உள்ளார்.

இந்நிலையில் இன்று கமல்ஹாசனுக்காக நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மேடையில் அரசியல் பேசியுள்ளார்.

"இரண்டு ஆண்டுகள் முன்பு முதல்வர் ஆவேன் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார், ஆனால் அதிசயம் நடந்தது. 4 மாசம் 5 மாசம் கவிழ்ந்துடும் என 99% மக்கள் சொன்னார்கள். அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. எல்லா தடையை மீறி தொடர்ந்துகொண்டிருக்கு. நேற்றும் அதிசயம் அற்புதம் நடந்தது, இன்றும் நடந்தது, நாளையும் நடக்கும்" என ரஜினி தான் முதல்வர் ஆகப்போவது பற்றி பேசியுள்ளார்.