Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2ல் நடிக்க வாய்ப்பு வந்தது.. நடிக்கமுடியவில்லை! தளபதி64 நடிகர்

ஷங்கர்-கமல் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இந்தியன்2 படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. படத்தில் காஜல், ராகுல் ப்ரீத், சித்தார்த், பாபி சிம்ஹா என பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வந்ததாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

நேற்று நடந்த கமல் 60 விழாவில் தான் விஜய் சேதுபதி இதை தெரிவித்துள்ளார். மேலும் கமலின் அரசியல் பற்றி பேசிய அவர் கமல் மக்களை ஏமாற்றமாட்டார் என கூறினார்.

தற்போது விஜய் சேதுபதி தளபதி64 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காகத்தான் அவர் இந்தியன்2 வாய்ப்பை நிராகரித்திருக்கலாம்.