வடிவேலு தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். இவரின் காமெடி காட்சிகளை தமிழ் சினிமா இன்றும் கொண்டாடி வருகின்றது.
தற்போது இவரின் காமெடி காட்சிகள் இல்லாதது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் வருத்தம் தான், அப்படியிருக்க நேற்று கமல் 60 விழா நடந்தது.
இதில் பேசிய வடிவேலு, தேவர்மகன் படத்தில் நடந்தது குறித்து பேசினார், அப்போது ‘சிவாஜி அவர்கள் தேவர்மகன் படத்தில் இறந்ததும், கமல் சார் என்னை அழ சொன்னார்.
உடனே நான் கதறி அழ, படுத்திருந்த சிவாஜி ஐய்யா உடனே எழுந்து, “டேய் கமல் தாண்டா எனக்கு இந்த படத்தில் மகன்.
நீயுமா எனக்கு மகன்?, கொஞ்சம் அடக்கி வாசிங்கடா” என்று சொன்னார், அப்போது தான் தெரிந்தது காட்சிக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டும் என்று’ என வடிவேலு பேசினார்.