ஏன் அஜித்தும் அரசியலுக்கு வரக்கூடாதா? நாங்கள் களமிறக்குவோம்: முக்கிய அரசியல் பிரபலம் பேச்சு
நடிகர் ரஜினி மற்றும் கமல் இருவரும் அரசியலில் குதித்துள்ள நிலையில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளார்.
நேற்று நடந்த கமல்60 விழாவில் நடிகர் கமல்-ரஜினி இருவரும் ஒன்றாக பங்கேற்றனர். அதில் பேசிய ரஜினி 'எடப்பாடி முதலமைச்சர் ஆவேன் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ஆனால் அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. நாளையும் அதிசயம் நடக்கும்' என கூறினார்.
இதுபற்றி தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். "ரஜினி ஆன்மிகவாதி என்பதால் நாளை எதுவும் நடக்கலாம் என ஆன்மிக கோணத்தில் கூறியுள்ளார்" என குறிப்பிட்ட அவர், 'கமல், ரஜினி, விஜய் மட்டும்தான் அரசியலுக்கு வரணுமா, அஜித் வரக்கூடாதா? என கேட்டுள்ளார்.
மேலும் அதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை நாங்கள் களமிறக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார் அவர்.
ரஜினி, கமல், விஜய் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? நடிகர் அஜித் அவர்கள் வரக்கூடாதா?
— AIADMK (@AIADMKOfficial) November 18, 2019
மக்களுக்கு இடையறாது தொண்டாற்றுகின்ற அஇஅதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை நாங்கள் களமிறக்குவோம்.
- மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள் பேட்டி.