Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரோபோ ஷங்கர் மூலம் அஜித்திற்கு கிடைத்த அழகிய பரிசு- நேரில் தலயிடம் கொடுத்த ரசிகரின் பதிவு

விஸ்வாசம் என்ற படத்தில் காமெடி நடிகர்களில் ஒருவராக நடித்தவர் ரோபோ ஷங்கர். அந்த படப்பிடிப்பில் தனது குடும்பத்தை அழைத்து சென்று அஜித்துடன் புகைப்படம் எல்லாம் எடுத்துக் கொண்டார்.

அவருடைய நண்பர் ஒருவர் ஹைதராபாத்தில் இருந்துள்ளார். அவரும் அஜித் ரசிகர் என்பதால் ரோபோ ஷங்கர் தலயை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார். பின் ரோபோ ஷங்கர் மற்றும் அந்த ரசிகர் அஜித்தை சந்துள்ளனர்.

அஜித் பழகியதை பார்த்து அசந்துபோன அந்த ரசிகர் ஒரு பரிசு கொடுத்துள்ளார். அதில் அஜித் மற்றும் அவரது மகள் இருப்பது போல ஒரு புகைப்படம். தற்போது அந்த புகைப்படம் அஜித் அவர்களின் வீட்டில் மாட்டப்பட்டுள்ளதாக அவர் பதிவு செய்துள்ளார்.