Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி-கமல் கூட்டணி உறுதி? இருவரும் அளித்துள்ள பேட்டி

ரஜினி மற்றும் கமல் இருவரும் அரசியலில் கூட்டணி சேர்கிறார்கள் என கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன. சமீப காலமாக பல நிகழ்ச்சிகளில் அவர்கள் ஒன்றாகவே பங்கேற்றனர்.

இந்நிலையில் கமல் அளித்த பேட்டி ஒன்றில் "தமிழகத்தின் மேம்பாட்டுக்காக சேர்ந்து பயணிக்க வேண்டி வந்தால் நிச்சயம் பயணிப்போம்" என பேட்டி அளித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த ரஜினி தமிழக மக்களின் நலனுக்காக நானும் கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்" என தெரிவித்தார்.

இருவரும் கூட்டணி பற்றி இப்படி கூறியிருப்பதால் இருவரும் இணைவது கிட்டத்தட்ட உறுதி என்று ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.