Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவர் படங்களை பார்த்திருந்தால் சினிமாவுக்கே வந்திருக்கமாட்டேன்: விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தன் எதார்த்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். தளபதி64 உட்பட தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை நடந்த கமல்60 நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். மேடையில் பேசிய அவர் தான் இந்தியன் 2ல் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளமுடியாமல் போனது பற்றி வருத்தப்பட்டார். மேலும் தனக்கு ஒரு படத்தில் வாய்ப்பு தரும்படியும் கமலிடம் கேட்டார் அவர்.

மேலும் சிறு வயதில் பல படங்களை பார்க்காமல் விட்டுவிட்டதாக குறிப்பிட்ட அவர் 'கமலின் படங்களை பார்த்திருந்தால் நான் சினிமாவுக்கே வந்திருக்கமாட்டேன்' என கூறியுள்ளார்.