Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம், துருவ் விக்ரம் இருவருக்குமே பிடித்த ஒரே நடிகர்

சியான் விக்ரம் தன்னுடைய படத்திற்காக வேலை செய்வதை தாண்டி மகனுக்காக படு பிஸியாக பணியாற்றி வருகிறார்.

அவரது மகன் துருவ் வர்மா என்ற படம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக இருந்தார். ஆனால் அந்த படம் பிரச்சனையில் போய் முடிய மீண்டும் அந்த படம் ஆதித்ய வர்மா என்ற பெயரில் படமாக்கப்பட்டது.

இப்படம் வரும் நவம்பர் 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் மற்றும் துருவ் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்களிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்க, உடனே இருவரும் விஜய்யின் புகைப்படத்தை காட்டியுள்ளனர். இந்த செய்தியை தளபதி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.