Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சதிஷ் திருமணம் செய்யும் பெண் யார் தெரியுமா? இந்த இயக்குனரின் தங்கை தான்

காமெடி நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவில் டாப் காமெடியன்களில் ஒருவர். தளபதி விஜய், சிவகார்திகேயன் என பல ஹீரோக்களின் படஙக்ளில் நடித்துள்ளார்.

இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. சிந்து என்ற பெண்ணுக்கும் சதீசுக்கும் சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

சிந்து யார் தெரியுமா? மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியான சிக்ஸர் என்ற படத்தினை இயக்கிய சாசி என்பவரது தங்கை தான் சிந்து.

டிசம்பர் மாதம் இவர்கள் திருமணம் நடைபெறுகிறது. அதற்காக தற்போது சினிமா துறை நட்சத்திரங்கள் பலருக்கும் அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் சதிஷ். நேற்று அவர் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த புகைப்படங்களும் வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.