Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

த்ருவ் குறித்து வந்த போஸ்டர் உண்மையில்லை, யாரும் நம்ப வேண்டாம்!

விக்ரம் தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகர். இவர் மகன் த்ருவ் தமிழ் சினிமாவில் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலிஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, எல்லோராலும் த்ருவ் நடிப்பு பாராட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் த்ருவ்விற்கு தமிழகம் முழுவதும் பல இடங்களில் போஸ்டர், பேனர் என அடித்து கலக்கியுள்ளனர் விக்ரம் ரசிகர்கள்.

இதில் தலதளபதியையே சீண்டுவது போல் ஒரு வசனம் இடம்பெற்ற போஸ்டர் வைரலாகி வருகின்றது.

ஆனால், அது உண்மையில்லை, யாரோ செய்த போட்டோஷாப் தானாம், யாரோ இப்படி வேண்டுமென்றே செய்துள்ளது போல் தெரிகின்றது.