Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எடப்பாடி வரும் பட விழாவிற்கு ரஜினி வருவாரா?

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். இவருக்கு இந்திய அரசு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கௌரவித்தது.

இந்நிலையில் ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சிவா படத்திற்காக தயாராகி வருகின்றார்.

தற்போது வேல்ஸ் நிறுவனம் எல்கேஜி, கோமாளி படத்தின் வெற்றியை பிரமாண்டமாக விழா எடுத்துகொண்டாட உள்ளனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள ரஜினிக்கு அழைப்புவிடுத்துள்ளனர், ஆனால், அதே விழாவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால், இந்த விழா விற்கு ரஜினி வருவாரா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.