Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மனைவி சங்கீதாவுடன் திருமணம் முடிவானது எப்படி?- பேட்டியில் அழகாக கூறியிருக்கும் விஜய்

விஜய் தமிழகம் கொண்டாடும் இளைய தளபதி. இவர் இப்போது தன்னுடைய 64வது படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லியில் பிஸியாக இருக்கிறார்.

இப்பட தகவல்களுக்கு நடுவில் விஜய்யின் ஒரு பேட்டி ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது. அந்த பேட்டியில் தனக்கு சங்கீதாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது எப்படி என அழகாக கூறியுள்ளார்.

அதில், பொதுவாக ரசிகர்களை சந்திப்பேன், அப்போது லண்டனில் இருந்து வந்திருக்கிறார், சங்கீதா என அறிமுகம் செய்தனர். பின் அவர்கள் அப்பா-அம்மாவை சந்திக்கலாமா என்று கேட்டார்கள், பிறகு வீட்டிற்கு வந்து அவர்களை சந்தித்து விட்டு சென்றுவிட்டார்கள்.

ஒருநாள் அப்பா காதலுக்கு மரியாதை படப்பிடிப்பு முடிந்த வந்ததும் என்னிடம் பேசினார். அப்போது சங்கீதா பற்றி என்ன நினைக்கிறாய், திருமணம் பேசலாமா என்று கேட்டார். அவர் கேட்டது எனக்கு முதலில் ஷாக், பிறகு யோசித்து கூறுகிறேன் என்றேன்.

ஒரு வாரம் கழித்து உங்கள் இஷ்டம் என்றேன், எனக்கு அவர்கள் நிறைய செய்துள்ளார். அவர்களை சந்தோஷப்படுத்த என்னால் இது மட்டும் தான் செய்ய முடியும்.

நிச்சயதார்த்தம் அவர்களது இஷ்டம் என்றேன், ஆனால் திருமணம் 2,3 வருடம் கழித்து தான் செய்துகொள்வேன் என கூறியதாக விஜய் முந்தைய ஒரு பேட்டியில் அழகாக கூறியுள்ளார்.