Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரிடேடிங்காக இருக்கு! நீங்க என்ன நினைச்ச எனக்கென்ன.. சர்ச்சை பற்றி கோபமாக பேசிய விஜய் தேவரக்கொண்டா

நடிகர் விஜய் தேவரக்கொண்டா நடித்துள்ள அர்ஜுன் ரெட்டி படம் மிகப்பெரிய ஹிட். அதை ஹிந்தியில் ரீமேக் செய்து அங்கும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நடிகர்கள் பேட்டியில் மலையாள நடிகை பார்வதி விஜய் தேவரகொண்டா முன்னிலையிலேயே அர்ஜுன் ரெட்டி படம் பற்றி விமர்சித்தார்.

இதுபற்றி தற்போது பேசியுள்ள விஜய் தேவரகொண்டா, "எனக்கு பார்வதியை பிடிக்கும். அவரது படங்களும் எனக்கு பிடிக்கும். அவர் கேள்வி கேட்டதில் தவறில்லை. ஆனால் இந்த சோசியல் மீடியா மற்றும் மீடியா செய்யும் அடாவடி தான் எனக்கு இரிடேடிங்காக இருக்கிறது. என்ன பேசுகிறோம், எதை பற்றி பேசுகிறோம் என்றே தெரியாமல் பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த படம், பேட்டி பற்றி நீங்கள் என்ன நினைத்தால் எனக்கென்ன" என கேட்டுள்ளார் அவர்.