A1 படத்தை தொடர்ந்து விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து முடித்துள்ள படம் டகால்டி. அண்மையில் கூட இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் டகால்டி படத்தை தொடர்ந்து டிக்கிலோனா என்ற படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இப்படத்தில் சந்தானத்தின் மகன் நடிக்கப்போகிறார் என்று சில தகவல்கள் கசிந்து வருகின்றது.
சமீபத்தில் விஜய் சேதுபதியின் மகன் சினிமாவில் நடிகராக அறிமுகமானார், அதுபோல தற்போது சந்தானமும் தன் வாரிசை சினிமாவில் களமிறக்குகிறார் போல.
மேலும் சர்வர் சுந்தரம், மன்னவன் வந்தானடி, ஓடி ஓடி உழைக்கணும் போன்ற படங்களின் ரிலீஸ் தள்ளி போகும் காரணத்தினால் ஒரு வருடத்திற்கு ஓர் இரு படங்கள் மட்டுமே நடித்து வருகிறார் சந்தானம்.