Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்நாட்டில் கால் வைக்கும்போதே வந்த சிக்கல்.. யாருக்கும் தெரியாத தகவலை கூறிய ரஜினி

நேற்று நடந்த தர்பார் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் தெரியாத ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.

அவர் எஸ்எஸ்எல்சி பெயில் ஆகி அடுத்த தேர்வில் தான் பாஸ் ஆனாராம். நான் வேலைக்கு போகிறேன், படிக்க விருப்பமில்லை என அண்ணனிடம் கூறினாராம். ஆனால் அவரோ 'வீட்டில் யாருமே படிக்கவில்லை, நீ படித்து ஐபிஎஸ் ஆகவேண்டும்' என கூறி ஒரு பெரிய பள்ளியில் சேர்த்துவிட்டாராம். தேர்வு வரும்போது அண்ணன் 120ருபாய் தேர்வு கட்டணம் செலுத்த கொடுத்தாராம்.

"தேர்வு எழுதினால் நிச்சயம் பெயில் தான் ஆகப்போகிறோம் என தெரியும், அதனால் ரயில் நிலையம் சென்று டிக்கெட் எடுத்து சென்னை ரயில் ஏறி படுத்துவிட்டேன். மறுநாள் காலை பார்க்கும்போதே மெட் ராஸ் வந்திருந்தது. கீழே இறங்கியபோதே டிக்கெட் கலெக்டர் டிக்கெட் கேட்டார். நான் டிக்கெட் தொலைத்துவிட்டிருந்தேன். நான் டிக்கெட் எடுத்தேன், ஆனால் தொலைந்துவிட்டது என கூறினேன்.

அவர்கள் என்னை நம்பவில்லை. அபராதம் செலுத்தவேண்டும், ஜெயில் தண்டனை என கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போது அருகில் இருந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் வந்து எனக்கு பணம் தருவதாக கூறினார்கள். என்னிடமே பணம் இருக்கிறது என எடுத்து காட்டி, நான் டிக்கெட் வாங்கி தொலைத்துவிட்டேன் என கூறினேன். அதை பார்த்துவிட்டு அதிகாரி என்னை நம்பினார்."

இவ்வாறு தமிழ்நாட்டில் கால் வைக்கும்போதே ஏற்பட்ட சிக்கல் பற்றி ரஜினி கூறியுள்ளார்.