Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நல்ல விஷயங்களுக்காக பாராட்டப்பட்ட ராகவா லாரன்ஸை திட்டும் ரசிகர்கள்- இதுதான் காரணம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடந்தது.

இதில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், சிறுவயதில் கமல் அவர்களின் போஸ்டர் மீது சாணி அடித்ததாக தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சு கமல் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது, பிரச்சனையும் வந்தது.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில், நான் சிறு வயதில் செய்த விஷயம் அது, ஆனால் கமல்ஹாசன் அவர்களின் மீது மிகப் பெரிய மரியாதை வைத்துள்ளேன்.

என் பேச்சால் கமல் ரசிகர்கள் யாராவது மனம் புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என போஸ்ட் செய்துள்ளார்.