Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரபரப்பான நேரத்தில் ரஜினியின் அதிரடியான பிளான்! பெரும் திருப்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மீதான அரசியல் எதிபார்ப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் மேலோங்கி இருக்கிறது. ஆனால் அவர் மௌனம் காத்து வருவது ரசிகர்களுக்கு சற்றும் ஏமாற்றம் தான்.

அவர் எப்போது கட்சி தொடங்குவார், தேர்தலில் போட்டியிடுவாரா, பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்கிறாரா என பல கேள்விகள் பலருக்கும் இருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற தர்பார் பட விழாவில் அவர் ரசிகர்கள் தம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது என சூசகமாக கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் அரசியல் பிரமுகர் தமிழருவி மணியனுடன் கட்சியின் பெயர் அறிவிப்பு, கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினாராம்.

அதன் படி அவர் வரும் 2020 சித்திரை மாதம் கட்சியின் பெயரை அறிவித்துவிட்டு பின் கட்சியை தொடங்கவுள்ளதாக தெரிகிறது.

2021 ல் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அவருக்காக ரஜினி மக்கள் மன்றத்தினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்களாம்.