Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படங்கள் ரிலீஸ் ஆகும் போது மட்டும் தான் பேசுகிறார் - ரஜினியை விமர்சித்த அரசியல் பிரமுகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது ரசிகர்களால் திரையுலகில் யாரும் தொடமுடியாத இடத்தை பிடித்துள்ளவர் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

தற்போது இவர் நடித்து 2020 பொங்கலுக்கு வெளிவர காத்திருக்கும் படம் தான் தர்பார். அண்மையில் கூட இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

விழாவில் பேசிய ரஜினி ‘என் மீது வைத்த நம்பிக்கை வீண்போகாது’ என மறைமுகமாக அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

ரஜினி பேசியது குறித்து அமைச்சர் கருப்பணன் அவர்கள் " ரஜினி தனது படங்கள் வெளிவரும் போது மட்டும் தான் அரசியல் பேசுகிறார் படம் வெளியான பிறகு பேசுவதில்லை இதுவே ரஜினியின் 15 வருட நிலைப்பாடு" என்று கூறியுள்ளார்.