Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழர் தான்! அடித்து சொல்லும் முக்கிய நபர்

நடிகர் ரஜினிகாந்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். சாதாரணமாக பேருந்து நடத்துனராக இருந்த அவர் நடிகராகி ஹீரோவாகி இன்று தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

அவரின் படங்களுக்கும் பெரும் மார்க்கெட் உள்ளது. இந்நிலையில் அவர் அரசியல் நுழைவதற்கான வேலைகளையும் செய்து வருகிறார்.

இதனால் சிலர் அவர் தமிழர் இல்லை என கூறி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நெல்லையை சேர்ந்த அவரது தீவிர ரசிகரான திருமாறன் என்பவர் ரஜினி கன்னடர் இல்லை, தமிழர் தான் அடித்து கூறுகிறார்.

மேலும் இதை நிரூபிக்கும் ஆதாரங்களை திரட்டும் பணியில் இறங்கியுள்ளார். மேலும் அவர் 3 நாள் பயணமாக ரஜினியின் உறவுகளையும் சந்தித்துள்ளாராம்.